17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் கழிவு நீர் ஓடையை சீரமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..

தென்காசியில் கழிவு நீர் ஓடையை சீரமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik September 21, 2024, 3:42 pm

தென்காசியில் முக்கிய சாலையில் செல்லும் கழிவு நீர் ஓடையை சீரமைத்து சுகாதாரம் காக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி ரயில் நிலையம் வடபகுதி மற்றும் ஐசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி, எம்.கே.வி.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் கழிவு நீர் ஓடை சென்று கொண்டிருக்கிறது. 

துர்நாற்றம் வீசும் இந்த கழிவு நீர் ஓடையால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள், பள்ளி பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தென்காசி நகராட்சி இந்த கழிவு நீர் ஓடை மற்றும் சாலையை சீரமைத்து சுகாதாரம் காக்க வேண்டும்  என பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!