18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

எழுதியவர்: Abubakker Sithik September 19, 2024, 6:09 pm

தென்காசி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், சின்னக் கோவிலாங்குளம் காவல் நிலையம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சின்னக் கோவிலாங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் கார்த்திக் (24). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!