உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் தாளாளர் முனைவர் லயன் வேல்முருகன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் லயன்.. அமுதப்பிரியா முன்னிலையில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .சி எஸ் ஐ பேராலய அருள் தந்தை கார்டர் ஜான்சன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தார்கள் . மேலும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி ஆசிரியை செல்லராணி வரவேற்புரை வழங்கினார்கள். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ந்தார்கள். விழா நிகழ்வுகளை ஆசிரியர் திவ்யா தொகுத்து வழங்கினார்கள். விழாவில் ஆசிரியர்கள் நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார் கள்.மாணவர்களும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். விழா நிறைவாக ஆசிரியை சுபா நன்றி கூறினார்.
ஆசிரியர் தின விழா
எழுதியவர்: mohan September 5, 2024, 6:32 pm




You must be logged in to post a comment.