இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் , தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, வாணி வேலு மாணிக்கம் மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நெகிழி தவிர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். துணை ஆளுநர் மரு. ரம்யா தினேஷ் மரு. ரமனீஸ்வரி ஆகியோர் துணிப்பைகளை வெளியிட வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் *நெகிழி தவிர்ப்போம்* என்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்று *துணிப் பைகள்* வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணையானது அரண்மனையில் துவங்கி மத்திய கொடி கம்பம் வண்டிக்கார தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை முன்பாக நிறைவு பெற்றது, இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் துணை ஆளுநர் சுகுமார் செயலர் அருண்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். இதில் 600 மாணவர்களும் , ஏராளமான ரோட்டரி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
எழுதியவர்: Baker BAker August 30, 2024, 10:24 pm




You must be logged in to post a comment.