18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ராமநாதபுரத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி.!

ராமநாதபுரத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி.!

எழுதியவர்: Baker BAker August 27, 2024, 3:29 pm

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி   நடைபெற்றது.

இந்த பேரணியில் 500 மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ஏராளமான ஆண்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர். ராமநாதபுரம் சந்தை திடலில் துவங்கிய இந்த பேரணி சின்னக்கடை வழியாக பாரதி நகர் பள்ளிவாசல் அருகே நிறைவடைந்தது.

பேரணியில் சென்றவர்கள் போதை பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் மூட வேண்டும் என்றுm போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் பலூன்களையும் கைகளில் ஏந்தியவாறு பேரணியில் வந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!