18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சியின் செயல் குழு கூட்டம் ! நகராட்சியை கண்டித்து மின்வாரியத் துறையை கண்டித்தும் தீர்மானம் !!

கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சியின் செயல் குழு கூட்டம் ! நகராட்சியை கண்டித்து மின்வாரியத் துறையை கண்டித்தும் தீர்மானம் !!

எழுதியவர்: Baker BAker August 24, 2024, 3:33 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் ஜலில் தலைமையில் தொகுதி துணைத் தலைவர் தாஜுல் அமீன் , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பகுருதீன் முன்னிலையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஸி , விம் மாவட்ட துணைத் தலைவர் முபினா இஸ்மாயில், விம் நகர் தலைவர் சுல்தான் பிவி எஸ்டிபிஐ முன்னாள் நகர் தலைவர்கள் நூருல் ஜமான் , கீழை அசரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு நலத்திட்டங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் போன்ற நலத்திட்டங்களை பற்றி விவாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு முறையாக சென்றடைய அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும்

 நகராட்சிக்குரிய அரசு அடிப்படை கட்டமைப்புகளான நூலகம், விளையாட்டு மைதானம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட எதுவும் இல்லாததால் கீழக்கரை நகராட்சியை கிராம ஊராட்சியாக மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும்

அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்தும் , வீடு வீடாக சென்று மின் அளவீட்டினை குறிப்பிட்ட நாட்கள் எடுக்க தவறிய கீழக்கரை மின்சாரத் துறையை கண்டித்து பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஹாஜா அலாவுதீன் ஃபாருக் மாமா இணைச் செயலாளர் செல்ல வாப்பா அன்சாரி முஜுப் ரகுமான் செயற்குழு உறுப்பினர்கள் காதர் சுலைமான் பகுருதீன் (இமாம்) ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் செயற்குழு உறுப்பினர் சுல்தான் சிக்கந்தர் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!