17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் தஸ்தகீர் கல்வியல் கல்லூரியில் இரத்த தான முகாம்..

இராமநாதபுரம் தஸ்தகீர் கல்வியல் கல்லூரியில் இரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2018, 12:52 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியல் கல்லூரியில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

இந்த இரத்த தான முகாம் இராமநாதபுரம் ரோட்டரி கிளப் கோரல் சிட்டி மற்றும் தஸ்தகீர் கல்லூரி நிர்வாகமும் இணைந்தும் நடத்தினர். இம்முகாம்மை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். இம்முகாமில் மாணவ, மாணவிகள் அறுபதுக்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், இரத்த வங்கி மருத்துவர் விநாயகமூர்த்தி, ரோட்டரி கிளப் கோரல் சிட்டி தலைவர் லோகநாதன், செயலாளர் ராஜா ரோட்டரி, உறுப்பினர் ஜெய கார்த்திகேயன், அருணகிரி மற்றும். இரத்த தானம் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!