இராமநாதபுரத்தில் தனியார் மஹாலில் இராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளையின் 10ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 2ம் கட்டமாக நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், நலிந்த விவசாயிகள் ஆகியோருக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருளான விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள் போன்ற நலத்திட்ட உதவிகள் பல லட்சம் மதிப்பில் அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் கண்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
எழுதியவர்: Baker BAker August 10, 2024, 7:45 pm




You must be logged in to post a comment.