17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகை மூட்டத்தால் பரபரப்பு..

மதுரையில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகை மூட்டத்தால் பரபரப்பு..

எழுதியவர்: Abubakker Sithik August 3, 2024, 9:37 pm

மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட இந்த புகையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மதுரை அவனியாபுரம் பகுதியை அடுத்துள்ள வெள்ளைக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு தீ எரிந்த நிலையில் போராடி தீயணைப்பு துறையினர் அனைத்தனர். இந்த நிலையில் வெள்ளைக்கல் குப்பை கிடங்கு அருகே உள்ள விவசாய நிலத்திலிருந்து திடீரென வானளவிற்கு புகை வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகையானது அருகில் உள்ள விமான நிலையம் செல்லும் சாலை வரை செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். திடீரென தீப்பற்றி புகைமூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!