17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..

தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..

எழுதியவர்: Abubakker Sithik August 3, 2024, 7:38 pm

தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன் குளத்தில் பூலுடையார் கோவில் ஆடி கொடை விழா இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பந்தல் மற்றும் மின் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பகலில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட பைக்குகள் எரிந்தது. உயிர் சேதம் ஏதும் இல்லை.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!