ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய முதல் கிளை வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகர் கமிட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அப்துல்ஜமீல் , அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் முகம்மது ஜலில் , செயலாளர் அகமது நதீர் , பொருளாளர் கலில் ரஹ்மான் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வாகியுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு எஸ்டிபிஐ கட்சியை நகர் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு
எழுதியவர்: Baker BAker July 29, 2024, 10:52 pm




You must be logged in to post a comment.