17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின் கட்டண உயர்வை கண்டித்து,திருவாடானையில் தேமுதிகவினர் ஆர்பாட்டம்..!

மின் கட்டண உயர்வை கண்டித்து,திருவாடானையில் தேமுதிகவினர் ஆர்பாட்டம்..!

எழுதியவர்: Baker BAker July 25, 2024, 10:44 pm

திருவாடானையில் தேமுதிக சார்பில் மின் கட்டணத்தை உயர்த்தியை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் தேமுதிக  சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

பெண்கள் கையில் மண்ணெண்ணெயில் எரியும் விளக்குகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாவட்டம், ஒன்றியம், கிளை கழக நிர்வாகிகள் உள்பட ஏளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!