17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » RTI வட்டம் » கல்வி » கீழக்கரை செய்திகள் » சட்டப்போராளிகள் » செய்திகள் » கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

எழுதியவர்: keelai March 26, 2018, 12:22 pm

அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது.

இந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வாறு கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது ? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது ? உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் நேற்று நடத்தியது.

இந்நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத்தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சட்ட பயிற்சி வகுப்பில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள் கலந்து கொண்டு சட்ட பயிற்சி பெற்றனர். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி வகுப்பினை வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் தகுந்த விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!