17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

எழுதியவர்: Askar July 11, 2024, 4:03 pm

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூலை 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையில் ஒரு சில இடங்களில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.தென் தமிழக கடலோரம், தெற்கு வங்கக்கடல், அரபிகடல் பகுதிகளில் ஜூலை 15ம் தேதிவரை 55 கி.மீ வரை காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!