ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உலக நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு மஞ்சப்பை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் தலைமையில் ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . மஞ்சப்பை பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் இணைந்து உறுதிமொழிகள் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும் நகராட்சிக்குட்பட்ட கடைகளுக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது . மேலும் ஓரிரு நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று மஞ்சப்பை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் மஞ்சப்பை பற்றி விழிப்புணர் நிகழ்ச்சி
எழுதியவர்: Baker BAker July 4, 2024, 2:58 am




You must be logged in to post a comment.