18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் நுகர்வோர் உரிமைகள் தின விழா ! மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு !!

ராமநாதபுரத்தில் நுகர்வோர் உரிமைகள் தின விழா ! மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு !!

எழுதியவர்: Baker BAker June 29, 2024, 10:35 am

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு முன்னிலையில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்  மாரிச்செல்வி வரவேற்புரை வழங்கினார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலசுப்பிரமணியம் , கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹீ ஆகியோர்  சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழும், இராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் நலசேவை பணி செய்கிற நுகர்வோர் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் சேவையை பாராட்டி கௌரவிக்கு பாராட்டு சான்றிதழும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.. தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது  இவ்விழாவில் அரசு துறை அலுவலர்கள்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!