இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் உரிய ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பொதுமக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் மாதம்தோறும் வழங்கப்படும். ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கு தேவையான திட்டப்பணிகளை அவ்வப்போது நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தேவையான பணிகளை தேர்வு செய்து நிறைவேற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகளுக்கு உடனுக்குடன் செயல்படுத்திடும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மகளிர் குழுக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானம் கிடைத்திடும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கிராம மக்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேஸ்வரி , கோட்டை இளங்கோவன் , தினைக்குளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி சிகப்பி , வண்ணாங்குண்டு ஊராட்சி மன்றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினைக்குளம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
எழுதியவர்: Baker BAker June 26, 2024, 12:17 am




You must be logged in to post a comment.