17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்டிபிஐ கட்சி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கி செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி..

எஸ்டிபிஐ கட்சி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கி செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி..

எழுதியவர்: Abubakker Sithik June 21, 2024, 7:17 pm

திருப்பரங்குன்றம் வில்லாபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலவரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் சம்சுதீன் மற்றும் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தனர். டிராவல்ஸ் ஆசிப் மற்றும் முகமது இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினர். மதுரை மாவட்ட .தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எஸ்டிபிஐ கட்சி கொடியை ஏற்றி பள்ளி மாணவர்களுக்கான நோட்புக் வழங்கினார். பின்னர் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், எஸ் டி பி ஐ கட்சி 20 மாநிலங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது 10 மாநிலங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியலமைப்பு கட்டமைப்புடன் உள்ளது. அனைத்து மக்களுக்கும் சமூக மற்றும் சம நீதி கொடுக்கக்கூடிய அரசியல் கட்சியாக கொள்கையை முன் வைத்துள்ளது என அபுபக்கர் சித்திக் கூறினார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!