தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து திருச்சி சூர்யா அதிரடி நீக்கம்..
எழுதியவர்: Askar June 20, 2024, 10:17 am




You must be logged in to post a comment.