17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை ! உலக மக்கள் அமைதிக்காக கூட்டுப் பிராத்தனை !

கீழக்கரையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை ! உலக மக்கள் அமைதிக்காக கூட்டுப் பிராத்தனை !

எழுதியவர்: Baker BAker June 17, 2024, 9:04 am

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஓடக்கரை பள்ளி ஜமாத் சார்பில் 18 வாலிபர்கள் தர்கா அருகில் அமைந்துள்ள திடலில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும்  கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டனர். பக்ரீத் திருநாள் என்பது இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இஸ்லாமியர்களால் முக்கிய பண்டிகையான தியாகத் திருநாள் என்னும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர், அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்த சிறப்பு தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!