18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சங்கரன்கோவிலில் காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது..

சங்கரன்கோவிலில் காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது..

எழுதியவர்: Abubakker Sithik June 15, 2024, 11:19 am

சங்கரன்கோவிலில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே கேட் அருகே பயிற்சி சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது மதுபோதையில் இருந்த மூவரும் காவல்துறையினரிடம் தங்களை எப்படி நிறுத்தி சோதனை செய்யலாம் என்று பிரச்சனை செய்து அவர்களை அசிங்கமாக பேசி எங்களை சோதனை செய்தால் பைக்கால் ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து பயிற்சி சார்பு ஆய்வாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டு சிவகிரி துரைசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகனான அந்தோணி (26), கனகராஜ் என்பவரின் மகன் கண்ணன் மற்றும் ஜெயா என்பவரின் மகன் கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அந்தோனியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!