18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகள் – பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்..

திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகள் – பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்..

எழுதியவர்: Askar June 5, 2024, 9:01 pm

திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகள் – பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்..

திண்டுக்கல்லை அடுத்த N.S.நகர் பேருந்து நிறுத்தம் அருகே சீலப்பாடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது குப்பையில் இருந்த ஒரு பையில் 2 உலோக சிலைகள் இருப்பதை கண்டறிந்து சீலப்பாடி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன், வருவாய் ஆய்வாளர் அறிவழகன், சீலப்பாடி கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டி மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு 2 உலோக சிலைகளை கைப்பற்றி திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைப்பறையில் வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!