17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி – ஜூன் 8-ல் பதவியேற்பு??

மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி – ஜூன் 8-ல் பதவியேற்பு??

எழுதியவர்: Askar June 5, 2024, 1:43 pm

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்கு ஏதுவாக 17-வது மக்களவையை கலைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனிடையே, தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா வருகிற 8-ந்தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!