இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே SDPI கட்சியின் சார்பில் தேரிருவேலி சாலையில் வேகத்தடை அமைத்துத் தருதல் மற்றும் சாலையோரம் நடைபாதைக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது . முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான் தலைமை தாங்கினார். மேலும் போராட்டத்திற்கு ஆண்கள் பெண்கள் உட்பட பலர் சாலையில் குவிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டியதால் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர், மாவட்ட துணைத் தலைவர் மீரான் முஹைதீன் , மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் முஹம்மது, முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ரஷீத் கான் , தொகுதி செயலாளர் செய்யது பாரூக், தொகுதி துணைத் தலைவர் நூர் முஹம்மது, பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சுல்தான் சம்சுதீன், ஒன்றிய தலைவர் அம்ஜத்கான், ஒன்றிய செயலாளர்கள் சதக்கத்துல்லா மற்றும் அப்துல் ஹமீது , நகர் செயலாளர் சஹாபுதீன் உள்ளிட்ட SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூரில் SDPI கட்சியினர் போராட்டம்
எழுதியவர்: Baker BAker June 3, 2024, 4:48 pm




You must be logged in to post a comment.