17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோடை விடுமுறையை நீட்டித்து மாணவர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை..

கோடை விடுமுறையை நீட்டித்து மாணவர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை..

எழுதியவர்: Askar May 31, 2024, 7:35 pm

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்தனர். இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை வெயில் அதிகரித்துள்ளதால் ஜூன் 6-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன், ராமதாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!