17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் ஏழு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..

தென்காசி மாவட்டத்தில் ஏழு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik May 30, 2024, 10:40 am

தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு; மாவட்ட எஸ்.பி அதிரடி..

தென்காசி மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த 07 நபர்கள், மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சங்கரன்கோவில் சுடலையாண்டி என்பவரின் மகன் சுரேஷ்(27) மற்றும் வல்லம் பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான பெருங்கோட்டூர் பிச்சையா என்பவரின் மகன் மாரிசாமி (38), வல்லம் சந்தனகுமார் என்பவரின் மகன் இசக்கி முத்துப்பாண்டி (20), கண்ணன் என்பவரின் மகன் பிரவீன் குமார்(23), இசக்கித்துரை என்பவரின் மகன் சுபாஷ் (26), கண்ணன் என்பவரின் மகன் சந்தோஷ் (24) மற்றும் பிச்சையா என்பவரின் மகன் சந்தனகுமார் (45) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!