17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த பெண் தலைமை காவலரின் மகன்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த பெண் தலைமை காவலரின் மகன்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

எழுதியவர்: Abubakker Sithik May 29, 2024, 9:51 am

யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகன்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..

பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகனை பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார். தாய்லாந்தில் நடைபெற்ற 3 வது பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் சைலா அவர்களின் மகன் முகில்வர்ஷன் (14) என்பவர் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த சிறுவன் முகில் வர்ஷனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டி மேலும் பல பதக்கங்களை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!