17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது சாரம் விழுந்து விபத்து; நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை..

மதுரையில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது சாரம் விழுந்து விபத்து; நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை..

எழுதியவர்: Askar May 28, 2024, 2:00 pm

மதுரையில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது சாரம் விழுந்து விபத்து; நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை..

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டு இருந்த இரும்பு சாரம் திடீரென பலத்த காற்று காரணமாக சரிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது.

தொடர்ந்து உயர் மின் அழுத்த கம்பியின் மீது விழுந்தது. மேலும் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாத காரணத்தினால் அசம்பாவிதம் சம்பவம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மிண்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள்  மின் இணைப்பை துண்டித்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி. காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!