18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதில் கார் பழுது பார்க்கும் கடை தீப்பிடித்து எரிந்து நாசம். ,

உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதில் கார் பழுது பார்க்கும் கடை தீப்பிடித்து எரிந்து நாசம். ,

எழுதியவர்: mohan May 28, 2024, 12:37 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டல்பட்டி கிராமத்தில் சங்கம்பட்டியைச் சேர்ந்த மலைராஜன் என்பவர் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில் நள்ளிரவு மின்சாரம் வந்த நிலையில் பவர் அதிகம் வந்ததால் கடையில் இருக்கும் வயர் ஸ்டார்ட் ஆகி கடையில் தீ பரவியது.இதில் கடைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.காலையில் வழக்கம் போல் கடையைத்திறந்த மலைராஜன் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானதைக்கண்டு திடுக்கிட்டார்

.இது குறித்து உசிலம்பட்டி காவல்துறைக்கும் மின் வாரியத்திலும் புகார் அளித்துள்ளார்.மேலும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று உசிலம்பட்டி பகுதியில் மின் வோல்டேஜ் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் அவல நிலை உள்ளதாகவும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மலை ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உசிலை மோகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!