17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலகரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி; சங்கரன்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு..

மேலகரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி; சங்கரன்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு..

எழுதியவர்: Abubakker Sithik May 27, 2024, 10:17 am

மேலகரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மயிலேரி தலைமையில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வள்ளியம்மாள் முன்னாள் தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாசன் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் கலந்து கொன்டனர். இதில் மாணவர்கள் ஒவ்வொரும் சந்தித்து தற்போதைய பணிகள் மற்றும் குடும்ப விவரங்களை கேட்டறிந்து கொண்டதுடன், பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு சந்தித்தது அவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழுவை சேர்ந்த மகாராஜன், உலகநாதன், செந்தில், உடற்பயிற்சி ஆசிரியர் துரைராஜ், ரகுமான், ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!