17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார்ட் கல்வி மையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு; சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..

பார்ட் கல்வி மையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு; சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..

எழுதியவர்: Abubakker Sithik May 27, 2024, 8:20 am

புளியங்குடி பார்ட் கல்வி மையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு; சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..

தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் பயிற்சி மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட கோடைகால சிறப்பாக பயிற்சி நிறைவடைந்து மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு அத்துடன் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. 6 பள்ளிகளில் படித்து கொண்டிருக்கும் 70 மாணவ மாணவியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஒருமாத காலம் ஆங்கிலம் பேசுதல், ஆங்கில இலக்கணம் மற்றும் அடிப்படை உரிமையியல் (இந்திய சட்டம்) ஆகியவைகளை கற்றறிந்தார்கள்.

நிகழ்ச்சியில், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காதர் முஹைதீன், நியு கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சபீனா, வெல்டன் ஆங்கில பள்ளி ஆசிரியர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். மேலும், இந்நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இதுபோல் சிறப்பு வகுப்புகளை அதிக விடுமுறை நாட்களிலும், வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடத்துமாறு வேண்டுகோள் வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஆங்கிலம் பேசுதல் மற்றும் ஆங்கில இலக்கணம் கற்று தர சிறந்த ஆசிரியரை தந்த வெல்டன் ஆங்கிலப் பள்ளி தாளாளர் சகோதரர் முஹம்மது ரபீக், அடிப்படை உரிமையியல் (இந்திய சட்டம்) கற்பித்து தர அஜிதா பேகம் வழக்கறிஞரை அறிமுகம் செயத அப்துல் காதர் ஆகியோருக்கு பார்ட் அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!