ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கண்காட்சி ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆறுமுகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் வள்ளல் கண்ணன் ஆகியோர் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது . இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகளான சூரியலட்சுமி. சுவாதி. தாமரைச்செல்வி. சிந்து பிரியா.சுகந்தி. சுமதி , வைஷ்ணவி. தமிழ்செல்வி. ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றியும் , மாவட்டத்திற்கு ஏற்ற பயிர் ரகங்களின் விதைகள் பற்றியும் அதன் செய்முறைகளையும் கண்காட்சியை கண்டுகளிக்க வந்தவர்களிடம் விளக்கினர். இதில் தென்னையைத் தாக்கும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, எரியோபைட் சிலந்தி, வெள்ளை சுருள் ஈ ஆகிய பூச்சிகளின் சேதங்களை கட்டுப்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் மகசூலை அதிகரிக்கும் செயல்முறை விளக்கத்தையும் விவசாயிகளுக்கு வழங்கினர் . அதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்தினர்.
குயவன்குடியில் விவசாயிகளுக்கான கண்காட்சி !
எழுதியவர்: Baker BAker May 26, 2024, 10:36 pm




You must be logged in to post a comment.