17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி தர்காவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு !

ஏர்வாடி தர்காவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு !

எழுதியவர்: Baker BAker May 26, 2024, 6:03 pm

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் அங்கு விற்பனை செய்யக்கூடிய உணவுக் கடைகள் தின்பண்டம் கடைகள் டீக்கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் ராஜ்குமார், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ,கீழக்கரை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து விற்பனையாளர்களிடம் தினமும் கடைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் , கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் , அதிகமாக கலர் வண்ணம் ஏதும் பயன்படுத்தக்கூடாது என்றும் , வடை பஜ்ஜி போண்டா உட்பட ஆயிலில் தயார் செய்யப்படும் தின்பண்ட பொருட்களை நியூஸ் பேப்பரில் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்திய ஐந்து கடைகளுக்கு அபதாரம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கப்பட்டது . மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!