18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து தொடர்பாக; சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு செல்கிறது..

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து தொடர்பாக; சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு செல்கிறது..

எழுதியவர்: Askar May 24, 2024, 7:23 pm

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பெண் காவலா்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையா் கடந்த 12-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இ ந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் கமலம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

அதில் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். மேலும் சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி தெரிவித்துள்ளார். அதேசமயம் கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபகளும் ஒருமித்த ஆணை பிறப்பித்துள்ளனர்.

இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு செல்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!