17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய விமானப் படையில் இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

இந்திய விமானப் படையில் இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

எழுதியவர்: Abubakker Sithik May 24, 2024, 6:25 pm

இந்திய விமானப் படையில் இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

இந்திய விமானப்படையில் அக்னி வீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்திய விமானப்படை சார்பில் பெங்களுரில் அமைந்துள்ள 7வது விமானப்படை தேர்வு மையத்தில் அக்னி வீர்வாயு இசைக் கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 03.07.2024 முதல் 12.07.2024 வரை நடைபெற இருக்கிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மற்றும் இசைக்கருவிகளில் வாசிக்க தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் 22.05.2024 முதல் 05.06.2024 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைமுறை மற்றும் பிற விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். எனவே தென்காசி மாவட்டத்தை சார்ந்த இசைக்கலைஞர் ஆர்வலர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!