17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது..

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது..

எழுதியவர்: Askar May 22, 2024, 11:18 pm

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது..

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி பகுதியில் மருத்துவமனைகள் நடத்தி வந்த சாணார்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி(67), மலைச்சாமி(62) ஆகிய 2 பேரின் மருத்துவமனைகளில் திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 10 வகுப்பு மட்டுமே படித்த துரைப்பாண்டி மருந்து, மாத்திரை கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. இதே போல் மலைச்சாமி முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்து அங்கிருந்து மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து துரைப்பாண்டி, மலைச்சாமி ஆகிய இருவரையும் சாணார்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர். இதை அடுத்து இருவரையும் சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நத்தம். செந்துறை. குடகிபட்டி . மனக்காட்டூர் உள்ளிட்ட நத்தம் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் அதிகளவு போலி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகள் விற்பனை செய்யும் கடை வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர் இவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!