18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கும் , பொதுமக்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி முன்னாள் தொகுதி பொருளாளர் வேண்டுகோள் !

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கும் , பொதுமக்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி முன்னாள் தொகுதி பொருளாளர் வேண்டுகோள் !

எழுதியவர்: Baker BAker May 21, 2024, 10:02 am

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் முன்னாள் தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் கூறியதாவது : கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் வெளியிட்டது. அதனை கீழக்கரை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்தனர். அதேபோல் வீடியோ காட்சியாக மட்டும் இல்லாமல் தினந்தோறும் கீழக்கரை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் , கீழக்கரையில் விற்பனை செய்யும் இறைச்சி கடைகளுக்கு சுற்றறிக்கை கொடுத்து கடைகளுக்கு முன்பாக ஏதேனும் இறைச்சிகள் கிடைக்கின்றதா என்றும் வெறி நாய்கள் அதை சாப்பிடுகிறதா என்பதையும் பார்வையிட வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோன்று பொதுமக்கள் கழிவான இறைச்சிகளை துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் பொதுவெளியில் கழிவு இறைச்சிகளை போட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் வெறி நாய்களின் தொல்லைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது என்றும் நாய் பிடிக்கும் கவனத்தை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!