18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்..

மதுரையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்..

எழுதியவர்: Abubakker Sithik May 20, 2024, 7:10 pm

மதுரையில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் சென்டர் மீடியத்தில் மோதி தலை குப்புற கவிழுந்து விபத்து..

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார், சென்டர் மீடியத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தனியார் டாக்ஸி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியத்தில் மோதியதில் கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சாகுல் ஹமீதை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து மதுரை கரிமேடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!