17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்மைய நாயக்கணூர் பயணிகள் நிழற்குடை: இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.? அச்சத்தில் பயணிகள்! அலட்சியத்தில் அதிகாரிகள்..

அம்மைய நாயக்கணூர் பயணிகள் நிழற்குடை: இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.? அச்சத்தில் பயணிகள்! அலட்சியத்தில் அதிகாரிகள்..

எழுதியவர்: Askar May 20, 2024, 3:12 pm

அம்மைய நாயக்கணூர் பயணிகள் நிழற்குடை: இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.? அச்சத்தில் பயணிகள்! அலட்சியத்தில் அதிகாரிகள்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் வழியாக வத்தலகுண்டு , கொடைக்கானல், மதுரை, திண்டுக்கல் ,தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.

அதுமட்டுமின்றி அம்மையநாயக்கனூர் பேரூராட்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் சென்று வருகின்றன.

எனவே அம்மையநாயக்கனூர் பேரூராட்சியை சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமப் பகுதி மக்கள் அம்மையநாயக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருப்பதற்காக அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்காமல் இருந்ததால் தற்போது பயணிகள் நிழல் குடை கட்டிடத்தில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது .

இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மீது மேற்கூரை விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக பயணிகள் நிழற்குடையை மராமத்து பணி செய்து புதுப்பிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!