18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஐபிஎல் கிரிக்கெட்! சென்னை அணியை வெளியேற்றியது பெங்களூரு..

ஐபிஎல் கிரிக்கெட்! சென்னை அணியை வெளியேற்றியது பெங்களூரு..

எழுதியவர்: Askar May 19, 2024, 3:51 pm

சனிக்கிழமை மாலை பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ஓட்டங்களுக்கு மேல் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் முதலில் பந்தடித்தது.

தொடக்கம் முதலே அதிரடிகாட்டிய பெங்களூரு விரைவாக ஓட்டங்கள் குவித்தது. இருப்பினும் 3 ஓவர்களுக்குப் பிறகு மழை பெய்ததால் ஆட்டம் தாமதமானது.

மழை சிறிது நேரத்தில் ஓய்ந்தது. அதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. விராத் கோஹ்லி (47), டு பிளஸ்ஸி (54), ரஜத் படிடர் (41), கேமரன் கிரீன் (38), மேக்ஸ்வெல் (16), தினே‌ஷ் கார்த்திக் (14) என களமிறங்கிய அனைத்து பெங்களூரு வீரர்களும் பொறுப்புடன் விளையாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் எடுத்தனர்.

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற 200 ஓட்டங்கள் எடுத்தாலே போதும் என்று களமிறங்கிய சென்னை அணி முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட்டை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் ரச்சின் ரவிந்திரா 37 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த ஜடேஜா- டோனி கூட்டணி 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்தது. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய சென்னை தொடரில் இருந்து வெளியேறியது.

தொடக்கத்தில் குழுப் பிரிவு ஆட்டங்களில் மோசமாக விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் வெற்றிபெற்று தற்போது ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!