18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஆவடி பகுதிகளில் நூதன முறையில் மிரட்டி பணம் பறித்த கும்பல்! கொத்தாக பிடித்து கைது செய்த போலீசார்..

ஆவடி பகுதிகளில் நூதன முறையில் மிரட்டி பணம் பறித்த கும்பல்! கொத்தாக பிடித்து கைது செய்த போலீசார்..

எழுதியவர்: Askar May 19, 2024, 11:37 am

ஆன்லைன் டேட்டிங் செயலில் நூதன முறையில் பணம் பறித்து வந்த ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை (25), சீனிவாசன் (26), தமிழன் (25), முகமது ரியாஸ் (23), பிரித்திவிராஜ் (28) ஆகிய 5 பேர் கைது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் (24) என்பவருக்கு, அகிலா என்ற பெண் டேட்டிங் செயலில் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவசர தேவையாகக் கண்ணனிடம்₹500 பெற்ற அகிலா தொடர்பில்லாமல் சென்றுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி அகிலா தற்கொலை செய்துவிட்டதாகவும், அது தொடர்பாகக் கண்ணன் மீது வழக்கு தொடர உள்ளதாகக் கூறி ₹13,500 பெற்ற நிலையில், மேலும் ₹70,000 கேட்டு அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அந்த தொகையைத் தர மறுத்த கண்ணன் போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!