17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு..

எழுதியவர்: Askar May 17, 2024, 10:33 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் திடீர் ஆய்வு..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளிகளில் இன்று 17-05-2024 வெள்ளியன்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு , தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர். முனைவர். எஸ்.கண்ணப்பன் அவர்களும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) த. ராஜேந்திரன் அவர்களும், கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர். .

அப்போது மேல்நிலை வகுப்புக்கான சேர்க்கையை முனைவர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் துவக்கி வைத்ததுடன் மாணவிகளுக்கு, அரசுப் பள்ளிகளுக்குரிய 7.5% இட ஒதுக்கீடு பற்றி எடுத்துரைத்தார்.

2024 ஆண்டு பொதுத்தேர்வுகளில் மேட்டுப்பாளையம், நகரவை பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை அளவாக நூறு சதவீத தேர்ச்சி பெற்றதற்கும் , தொடர்ந்து ஆறாண்டுகளாக 100% தேர்ச்சி அடைந்து வருவதை பாராட்டியும் தலைமையாசிரியை ஜி. இந்திரா அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் , சக ஆசிரியர்களையும் பாராட்டினார் மேலும் பள்ளியில் நடைப்பெறும் கட்டுமானப் பணிகள் , பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் மையத்தின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தனர்.

பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டதுடன் , மாணவிகள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலும் துவண்டு விடக்கூடாது எனவும் , சிறப்பு வகுப்பில் பயின்று தேர்ச்சி அடையவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழக அரசு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குகின்ற சலுகைகளை மாணவிகளிடையே எடுத்துரைத்தார் மேலும் சிறப்பாக பயின்று பள்ளிக்கும் தமிழக அரசிற்கும் நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்ததுடன் சிறப்பாக கல்வி கற்க தமிழக அரசு பல்வேறு வகை உதவிகளை செய்து வருவதையும் பட்டியலிட்டு கூறினார். . இந்த நிகழ்வு பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) த.ராஜேந்திரன் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.பாஷா, உதவித் தலைமையாசிரியர்கள் எம்.லீலா மகேஸ்வரி, எஸ். ஆனந்தகுமார், செல்வ பாரத் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் உடனிருந்தனர் . கல்வித்துறை இயக்குனரின் திடீர் ஆய்வு ஆசிரியர்கள் சேர்க்கைக்காக வந்திருந்த பெற்றோர்கள் மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!