18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..

எழுதியவர்: Abubakker Sithik May 17, 2024, 4:59 pm

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..

பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!