17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செவ்வூர் அருகே தனியார் பள்ளி விண்வெளி கண்காட்சி திறப்பு விழா !

செவ்வூர் அருகே தனியார் பள்ளி விண்வெளி கண்காட்சி திறப்பு விழா !

எழுதியவர்: Baker BAker May 16, 2024, 4:44 pm

சிவகங்கை மாவட்டம் செவ்வூர் அருகே சிவன் ஊர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்பேஸ் எக்ஸ்போ டி 24 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பூமிகோள்களில் இருந்து விண்வெளியை பார்க்கும் விதமாகவும், செவ்வாய் மற்றும் சந்திரன் நிலப்பரப்பிலிருந்து பூமியை பார்க்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து மாணவ மாணவிகள் பொதுமக்கள் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் கோள்கள் எவ்வாறு உள்ளது என செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. விண்வெளி மற்றும் கோள்களை பாட புத்தகத்தில் படிப்பது மட்டும் அதைவிட விண்வெளி கண்காட்சியில் பங்கேற்று அதை செயல்படுத்தி பார்க்கும் பொழுது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என மாணவ மாணவிகள் தெரிவித்தனர்இவ் விண்வெளி கண்காட்சியை மாணவ மாணவிகளே செய்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கத்து.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!