17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை; நகராட்சி தலைவருக்கு பாராட்டு..

தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை; நகராட்சி தலைவருக்கு பாராட்டு..

எழுதியவர்: Abubakker Sithik May 16, 2024, 11:10 am

தென்காசி நகராட்சிக்கு அஞ்சலில் வந்த மக்கள் கோரிக்கை; நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு..

தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் அட்டை மூலம் வந்த மக்கள் கோரிக்கையின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவரை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தென்காசி நகராட்சி தலைவராக ஆர். சாதிர் இருந்து வருகிறார். தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வாறுகால்களை தூய்மைப்படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என அஞ்சல் அட்டை மூலம் தென்காசி நகராட்சி தலைவருக்கு கோரிக்கை அனுப்பி இருந்தார். இந்த கோரிக்கைக்கு மதிப்பளித்து தென்காசி நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தென்காசி நகராட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்து வெற்றிவேல் எழுதியுள்ள கடிதத்தில், மதிப்பிற்குரிய சேர்மன் அவர்களுக்கு வணக்கம். 2 வாரங்களுக்கு முன்பு தென்காசி இந்தியன் வங்கி முன்புறம் காந்தி சிலை செல்லும் வழியில் இருக்கும் சந்தில் வாறுகால்களின் சுகாதாரச்சீர்கேடு பற்றிய எனது கடிதத்திற்கு மதிப்பு அளித்து உடனடியாக அதனை சுத்தப்படுத்த ஆணையிட்ட தங்களின் பண்பை எண்ணி வியக்கின்றேன். ஒரு சாதாரண அஞ்சல் அட்டைக்கும் எங்கள் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தங்களின் மீதான எனது மதிப்பினை பலப்படுத்தியுள்ளது. மிகவும் உயர்த்தியுள்ளது. அந்த வழியாக ஒரு நாளைக்கு பல முறை செல்கின்ற பாதசாரிகளில் நானும் ஒருவன். இந்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் இன்றியமையாதது என்பது உள்ளிட்ட தூய்மை குறித்த விழிப்புணர்வு பல பகுதிகளுக்கும் பரப்ப வேண்டும். ஒரு தெருவில் ஒரு சிலராவது விழிப்புணர்வுடன் இருந்தால் எமது நகரம் தூய்மை நகரம் ஆகும் என்ற நம்பிக்கையுடன் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!