18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் விருது விழா !

ராமநாதபுரத்தில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் விருது விழா !

எழுதியவர்: Baker BAker May 15, 2024, 8:32 pm

ராமநாதபுரம் தனியார் மஹாலில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சேர்மன் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட தலைவர் பரூக் அப்துல்லா முன்னிலை வகித்தார். இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மாரீஸ்வரன், மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா ஆகியோர் உரை ஆற்றினர். முன்னாள் ஆல்ரவுண்டர் மாரீஸ்வரன், சத்தியேந்திரன், மகேந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா, இலங்கை வீரர் சீக்குகெ பிரசன்னா, மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் வீரக்கோடி தனுஷ்க ஜீவக்க, பிங்கார சர்வதேச கிரிக்கெட் கிளப் பயிற்றுநர் காமகே அசெல பெரேரா ஆகியோர் விருது வழங்கினர். கிரிக்கெட் போட்டிகளின் தேசிய நடுவர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். டயுள்யு சி ஏ கிரிக்கெட் அகாடமி நிர்வாகி வாஹித் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!