இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் விவசாய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி குறித்து செய்முறை விளக்கம் ! விவசாயிகள் பங்கேற்பு !!
எழுதியவர்: Baker BAker May 13, 2024, 9:01 pm




You must be logged in to post a comment.