17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முருகா உன்னிடம் 20 ஆயிரம் கேட்டேன் 30 ஆயிரம் கேட்டேன் வெற்றி வேலவா உன்னிடம் தான் கேட்கிறேன் 6 லக்சமாவது தருக தருக பக்தனின் கோரிக்கை கடிதம் உண்டியலில் கிடைத்தது*

முருகா உன்னிடம் 20 ஆயிரம் கேட்டேன் 30 ஆயிரம் கேட்டேன் வெற்றி வேலவா உன்னிடம் தான் கேட்கிறேன் 6 லக்சமாவது தருக தருக பக்தனின் கோரிக்கை கடிதம் உண்டியலில் கிடைத்தது*

எழுதியவர்: Baker BAker May 9, 2024, 10:16 pm

*மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாதம் தோறும் உண்டியல் என்னும் பணி நடைபெறும் அதேபோல் ஒன்பதாம் தேதி கோயில் உள்ள 40 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது இதில் சுவாரசியமாக மூன்று சிறிய பேப்பர் கிடைக்கப்பெற்றது இதில் முதலாவதாக வந்த பேப்பரில் ஓம் கந்தா கடம்பா இன்று எனக்கு ரூ 20,000 வேண்டும் விரைவாக தருக ஜி ஜி ரன் என சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது அதேபோல் இரண்டாவது வந்த பேப்பரில் ஓம் முருகா துணை இன்று எனக்கு ரூ 30,000 வேண்டும் விரைவாக தருக ஜிஜி ரன் என சிவப்பு மையில் எழுதப்பட்டுள்ளது மூன்றாவது பேப்பரில் ஓம் சண்முகாவதியே நம வெற்றி வேலா எனக்கு ரூ 6,00,000 லக்சம் விரைவாக வேண்டும் கந்தா கடம்பா கார்த்திகேயா எனது வசம் ரூ 6,00,000 லக்சம் தர வேண்டும் ஏதாவது ஒரு வகையில் தருக தருக நன்றி இப்படிக்கு ஜிஜி ரன் என எழுதப்பட்டிருந்தது ஏதோ ஒரு படத்துல வடிவேலு சொன்ன மாதிரி யார் டப்பா கேக்குற நம்ம நம்ம முருகனிடம் தான கேக்குற கொஞ்சமா கேட்காத நிறைய கேளு அப்படின்னு சொன்ன மாதிரி அவரை எழுதிய பேப்பர் கிடைத்ததை பார்த்த அங்கிருந்த சிலர் வயிறு குலுங்க சிரித்தனர் பாவம் அந்த ஜிஜி ரன்னுக்கு என்ன கஷ்டமோ ஆறு லட்ச ரூபா கேட்டு இருக்காரு முருகன் கண்டிப்பா ஏதோ ஒரு வகையில் உதவி செய்வார் என்று நம்புவோம்..செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!