17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கைது !

கீழக்கரையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கைது !

எழுதியவர்: Baker BAker May 9, 2024, 10:10 am

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனி முகம்மது என்பவரின் மகன் கை என்ற முகமதுகான் (வயது 32) இவரும் கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சதாம் என்ற சதாம் உசேன் (34) என்பவரும் தொடர்ந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கண்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் மேற்கண்ட இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் மேற்கண்ட சதாம் என்ற சதாம் உசேன் மற்றும் கை என்ற முகமது கான் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மேற்கண்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!