17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்..

பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்..

எழுதியவர்: Askar May 3, 2024, 3:36 pm

பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்..

பழனி காந்தி மார்க்கெட்டில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். காந்தி மார்க்கெட் வழியாக தினமும் வரக்கூடிய மக்களுக்கு மோர் வழங்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வேலுமணி, நேதாஜி நற்பணி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு மோர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 15 நாட்களுக்கு கோடை வெப்பம் தனியும் வரையில் மோர் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

பழநி- ரியாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!